அதிரும் கொங்கு... அதிமுவை சேர்ந்த 6 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்.. முன்னாள் அமைச்சருக்கு வலை... திமுக அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 16, 2021, 1:30 PM IST
Highlights

இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் பதவிகளை பங்கு போட்டு, அவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. 

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ள 75 தொகுதிகளில், 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்தவை. ஆக, இத்தேர்தலில் அதிமுகவை பெரிதும் காப்பாற்றியது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தான்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மேற்கு மாவட்டங்கள், 'கொங்கு மண்டலம்' என அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் மொத்தமாக 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இந்த 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 24 தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.

குறிப்பாக, கோவை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், அதிமுகவின் பலமான வாக்கு வங்கிகளை கொண்ட மாவட்டங்கள் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், 2016 தேர்தலில் 9 தொகுதிகளை அதிமுகவும் , சிங்காநல்லூர் தொகுதியை திமுகவும் கைப்பற்றின. இம்முறை 10 தொகுதிகளும் அதிமுக கூட்டணி வசம் வந்துள்ளன. ஆனாலும், கொங்கு மண்டலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தி.மு.க.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.  

இதனால், அமமுகவிலி இருந்து திமுகவில் இணைந்து தற்போது திமுக அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை களமிறக்கி, கவுண்டர் சமுதாய புள்ளிகளை தி.மு.க.,வில் இணைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், சேலம் அ.ம.மு.க., மாவட்ட செயலர் வெங்கடாசலம் என பலர், தி.மு.க.,வில் சேர்ந்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவராக இருந்த மகேந்திரனையும் வலைத்து விட்டனர்.

அடுத்து கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த அதிமுகவில் உள்ள ஆறு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஒரு முன்னாள் அமைச்சர் ஆகியோர் தி.மு.க.,வுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் வந்தால் மேற்கண்ட மாவட்டங்களில், இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் பதவிகளை பங்கு போட்டு, அவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. 

click me!