போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடித்தது லக். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. சொன்னதை செய்த முதல்வர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 1:23 PM IST
Highlights

அந்த தேதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு (சிபிஎஸ்) திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். 

பல ஆண்டுகளாக தமிழக போக்குவரத்து கழக பணியாளர்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு முன் வந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகிகள் தங்களின் முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் வைப்பு நிதியை விடுவிக்க வேண்டும், போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வுதிய நிலுவைத் தொகை  போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவை எதற்கும் அப்போது பலனில்லை. அதிமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட போக்குவரத்து துறை தொழிலாளர்களின் போராட்டம் முக்கிய காரணமாகவே அமைந்தது என்று கூறும் அளவிற்கு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய  தொடர் போராட்டங்களை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திக்காட்டினார். 

இதை உணர்ந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்,  திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஓய்வு பெற்ற அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பணப்பலன்கள் 498.32 கோடி ரூபாய் விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டார். இது தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் அவர்களின் மற்றொரு நீண்டநாள் கோரிக்கையும், தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அமல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. அதாவது 1198 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்த திட்டம் திடீரென 1-4-2003 க்குப் பின்னர் கைவிடப்பட்டது.

அந்த தேதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு (சிபிஎஸ்) திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வந்துள்ளது, அதற்காக போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஆகும் தொகையை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென போக்குவரத்து துறை துணைச் செயலாளர் உத்தரவிடப்பட்டுள்ளார். அரசின் இந்த உத்தரவு போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
 

click me!