ஸ்டாலின் குடும்ப ரேஞ்சுக்கு நீங்களும் வசதியாய் செட்டிலாகணுமா..? சிம்பிளா இது நடந்தால் போதும்! அது எது..?

By Vishnu PriyaFirst Published Apr 3, 2019, 4:36 PM IST
Highlights

நம்ம பசங்க ஒழுங்கா ஆட்சி நடத்துறாங்களான்னு அம்மாவின் ஆவி, மேலோகத்தில் இருந்து எங்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம். (இருக்கலாம். ஆனால் ஓவர் உயரத்துல இருந்து கண்காணிக்கிறதாலே அம்மா ஆவிக்கு தெளிவா எதுவும் தெரியலைன்னு நினைக்கிறோம். இல்லேன்னா இந்நேரத்துக்கு அடிச்சு அலறவிட்டிருக்காதா பல பேரை?)
 

*    நம்ம பசங்க ஒழுங்கா ஆட்சி நடத்துறாங்களான்னு அம்மாவின் ஆவி, மேலோகத்தில் இருந்து எங்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம். (இருக்கலாம். ஆனால் ஓவர் உயரத்துல இருந்து கண்காணிக்கிறதாலே அம்மா ஆவிக்கு தெளிவா எதுவும் தெரியலைன்னு நினைக்கிறோம். இல்லேன்னா இந்நேரத்துக்கு அடிச்சு அலறவிட்டிருக்காதா பல பேரை?)

*    மாம்பழத்துக்கு பதிலாக ஆப்பிள் பழத்துக்கு வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் போலவே அ.தி.மு.க. வேட்பாளர்களும் ஜோக்கர்கள்தான். சிந்தனா சக்தியே இல்லாதவர்கள்: காங்கிரஸின் மோகன் குமாரமங்கலம். (ஓ...ஆனாலும் உங்க கட்சியோட மாஜி மாநில தலைவர் தங்கபாலுவை அடிச்சுக்க முடியுமா ஜி? அ.தி.மு.க. அமைச்சர்கள் ரெண்டு வருஷமா செஞ்ச கூத்தை, ஒரே நாள்ள கன்னியாகுமரி ராகுல் மேடையில் மொழிபெயர்ப்புங்கிற பெயர்ல பல்லாங்குழி ஆடி, பரிதவிக்க விட்டுட்டாரே?)

*    மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன், கோபாலபுர இல்லத்தில் கருணாநிதிக்கு பியானோஇசையால் இசை அஞ்சலி செலுத்திய லிடியன் நாதஸ்வரத்தை கவுரவப்படுத்தினார்: செய்தி. (ஹும், தேர்தல்ன்னு ஒண்ணு வந்து, அதில் வேட்பாளர்ன்னு ஒருவராகிட்டா என்னென்ன ஸ்டண்டை எல்லாம் போட வேண்டியிருக்குது. நாதஸ்வரமும், பியானோவும் இசைக்கருவிகள்னு தெரியும். ஆனால் ஒரு நாதஸ்வரமே இங்கே பியானோ வாசிக்குதேன்னு அய்யோ பாவம், தயாவே தாறுமாறா கன்பியூஸ் ஆகியிருப்பாரு.)

*    பா.ஜ.க. ஆட்சியில் யாராவது ஒரு கருத்தை சொன்னாலே, அவரை ‘அர்பன் நக்சலைட்’ என்று சித்தரித்து விடுகிறார்கள்: கவிதாயினி சல்மா.
(அதுசரி, ஆனா தி.மு.க. ஆட்சியில ஒருத்தன் கோயில் பக்கம் நின்னு சாமி கும்பிட்டாலே ‘இந்துத்வ வெறியன்! மதவாதி! பாசிஸ்ட்!’ன்னு பக்கம் பக்கமா பேர் வெச்சு, கொலையா கொல்லுவாய்ங்களே! அதுக்கு என்னாங்க கவிதாயினி மேடம் பண்ணுறது?)

*    நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவரும் முன்பேயே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைத்தான் குறிப்பிடுகிறேன்: மு.க.ஸ்டாலின். (ஒருவிதத்துல உண்மைதான் தல. ஆனாலும், தேர்தல் அறிக்கையில சொன்னதையெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு செய்தாகணும்னு இருந்தால், இந்தியா எப்பவோ ஆஸ்திரேலியா மாதிரி ஆகியிருக்கும். நாங்க எல்லோரும் உங்க லெவலுக்கு வசதியில வளர்ந்திருப்போம்.)

click me!