திமுக மட்டும்தான் சர்வே எடுக்குமா..? நாங்களும் எடுத்திருக்கோம்... புது குண்டு போடும் கார்த்தி சிதம்பரம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 19, 2020, 3:20 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்து சர்வே ரிப்போர்ட் எடுத்து வைத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்து சர்வே ரிப்போர்ட் எடுத்து வைத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ், திமுகவுடனான கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவிடம் 50 சீட்டுகளுக்கு குறையாமல் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி கட்சியாக 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதனால், அங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்து நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.  

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்க காரணம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால்தான் என திமுக தற்போது நினைக்கிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கார்த்திக் சிதம்பரம், “திமுக ஐபேக் மூலமாக தமிழகம் முழுவதும் சர்வே எடுத்துள்ளது போல காங்கிரஸும் சர்வே எடுத்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எந்த தொகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது என்பதை திமுக கூட்டணி விவாதத்தில் தெரிவிப்போம். இத்தனை தொகுதி வேண்டும் என்று எண்ணிக்கையில் கோரப்போவதில்லை. கூட்டணியின் வெற்றி மட்டுமே காங்கிரஸின் முக்கிய இலக்கு” என்று கூறியுள்ளார்.

click me!