தூங்கா நகரத்தை தட்டி துக்க திமுகவில் அதிரடி மாற்றம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Nov 19, 2020, 2:59 PM IST
Highlights

மதுரை மாநகர் மாவட்ட திமுக, மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட திமுக, மதுரை மாநகர் வடக்கு - மதுரை மாநகர் தெற்கு ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிப் பணிகள் வேகமெடுக்கவும், தொய்வின்றி நடக்கவும் திமுகவின் மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. 2 முதல் 4 சட்டப்பேரவை இடங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர், வடசென்னை, மேற்கு சென்னை, தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மதுரை மாநகர் மாவட்டம், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், மதுரை மாநகர் வடக்கு, -மதுரை மாநகர் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

*  மதுரை வடக்கு
*  மதுரை தெற்கு

மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

*  மதுரை மத்திய
*  மதுரை மேற்கு

மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர்  - பொன்.முத்துராமலிங்கம்,
 
மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர்  - கோ.தளபதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

click me!