திமுகவுக்கு ஓட்டுப்போடுவாரா கனிமொழி..? கலக்கத்தில் கழக உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2021, 1:54 PM IST
Highlights

ஊர் முழுவதும் சுற்றி திமுகவுக்கு ஓட்டுப்போடச் சொன்ன கனிமொழி, அவரே திமுகவுக்கு ஓட்டுப்போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. எம்.பி.யும், மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

தற்போது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கிறது. தமிழகம் முழுவதும் பம்பரமாய் சுழன்று வந்து திமுகவுக்கு வாக்கு கேட்டு வந்தார் கனிமொழி. அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரால் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாலோ தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே இருப்பதால் அவர் வாக்கு சாவடிக்கு செல்ல முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம் ஒருவார காலமாவது அவர் பொதுவெளிக்கு வர முடியாது.

கனிமொழி இந்த தேர்தலில் வாக்களிக்க PPE kit  உடன் வருவாரா? ஓட்டுப் போடுவாரா? திமுகவுக்கு ஓட்டு போடச் சொன்ன கனிமொழியால் திமுகவுக்கு ஓட்டு போட முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஊர் முழுவதும் சுற்றி திமுகவுக்கு ஓட்டுப்போடச் சொன்ன கனிமொழி, அவரே திமுகவுக்கு ஓட்டுப்போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 
 

click me!