தமிழகத்தில் கொரோனாவுக்கு சமாதி... 2.14 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது..

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 1:39 PM IST
Highlights

பின் சென்னை டி.எம்.எஸ்சில் உள்ள பொது சுகாதாரம் துறை இயக்குனரகம், மாநில தடுப்பூசி மருந்து சேமிப்பு கிடங்குக்கு 2.14 லட்சம் கோவாக்ஸின் மருந்துகளும் கொண்டுவரப்பட்டது. மேலும் இன்று மாலை 11.02 லட்சம் டோஸ்கள் கோவிட்ஷீல்டு தடுப்பு மருந்துகள் கொண்டுவரபட உள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாக பரவி வரும் நிலையில், 2.14 லட்சம் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் பாரத் பயோடெக் நிறுவனத்திலிருந்து சென்னை வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அது தீவிரமாக உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் இரட்டிப்பு தொற்றோ, அல்லது அதன் வேகமோ குறிப்பிடும்படி இல்லாவிட்டாலும் நோய்த்தொற்று என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3 ஆயிரத்து 290  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதானல் இதுவரை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 18 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1715 பேர் குணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்திலும் இதுவரை 12 ஆயிரத்து 750 பேர்  இறந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் இன்று ஒரே நாளில் 1118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வைரஸ் தொற்றுக்கு 7161 பேர்  சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2.14 லட்சம் கொரோனா காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்துள்ளது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்புசி மருந்துகள்  தயாரிக்கப்படும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திலிருந்து இன்று 2.16 லட்சம் கோவக்ஸின் தடுப்பு மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 

பின் சென்னை டி.எம்.எஸ்சில் உள்ள பொது சுகாதாரம் துறை இயக்குனரகம், மாநில தடுப்பூசி மருந்து சேமிப்பு கிடங்குக்கு 2.14 லட்சம் கோவாக்ஸின் மருந்துகளும் கொண்டுவரப்பட்டது. மேலும் இன்று மாலை 11.02 லட்சம் டோஸ்கள் கோவிட்ஷீல்டு தடுப்பு மருந்துகள் கொண்டுவரபட உள்ளது. பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் தடுப்பு மருந்துகள் சேமிப்பு நிலையங்களுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பப்படும் என கூறப்படுகிறது.  இதுவரை 34,05,800 டோசஸ் கோவிட்ஷீல்டு தடுப்பு மருந்துகளும் மற்றும் 5,67,520 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!