‘முடிஞ்சா என் வீட்டுக்குள்ள வந்து பாருங்க’... வருமான வரித்துறையை வாண்டடாக வம்புக்கு இழுக்கும் சீமான்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 3, 2021, 1:07 PM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே திமுக, அதிமுக என எவ்வித கட்சிபாகுபாடுமின்றி முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. நாளை இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் நிறைவடைய உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி நேரத்தில் வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் ஆகிய விதிமீறல்கள் நடக்கலாம் என்பதால் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களாகவே திமுக, அதிமுக என எவ்வித கட்சிபாகுபாடுமின்றி முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோக் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி, கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி, திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர். இன்று காலை கூட ​
தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகேயுள்ள அதிமுக தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இப்படி தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருவொற்றியூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த சீமான், தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பிரதமர் மோடி 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், என் வீட்டில் ஒரு முறையாவது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என்றும் சவால் விட்டுள்ளார். 
 

tags
click me!