உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத பச்சிளம் குழந்தை.. செல்லமாக கடிந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 1:06 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி, அவர் பச்சிளம் குழந்தை போல் பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன் என்றும்  அமைச்சர் தாக்கினார்.   

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி, அவர் பச்சிளம் குழந்தை போல் பேசி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன் என்றும்  அமைச்சர் தாக்கியுள்ளார்.  

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட எம். எஸ்.கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு  கல்மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்க்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

இதுவரை ராயபுரம் தொகுதியில் உள்ள 520 தெருக்களில் பத்து நாட்களில் தன்னுடைய ரதமான சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தான் வாக்கு சேகரித்துள்ளதாக கூறினார். இன்றுடன் தன்னுடைய பிரச்சாரம் நிறைவு பெறுகிறது என்ற அவர், உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் பக்குவம் இல்லாமல் பேசி வருவதாகவும், அவர் ஒரு பச்சிளம் குழந்தை போல் செயல்படுவதாகவும் கூறினார். திமுகவின் நட்சத்திர போச்சாளர் ஆர்.எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன் எனவும், அவருடைய கட்சிக்கு அவர் ஒரு பின்னடைவு என்றும், அது அனைத்தும் வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும் கூறினார். 

வருமான வரி துறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் தான் சோதனை செய்கிறார்கள் என்ற அவர், மடியில் கணம் உள்ளதால் தான் திமுகவினர் பதறுகிறார்கள் என்றார். ஊழலில் ஊறிய கட்சி  திமுக என்றும் அவர் குற்றம் சாட்டினர். மேலும், ராயபுரம் தொகுதியின் திமுக வேட்பாளர் 100 கோடி ரூபாய் வரை தேர்தலில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார். வாக்கு சேகரிப்பின் போது கிழக்கு கல் மண்டபம் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடையில் அமர்ந்து கூலாக இளநீர் வெட்டி பருகினார். அமைச்சரின் இந்த நடவடிக்கையை மக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். 
 

click me!