பொள்ளாச்சி ஜெயராமன் மகனை உள்ளே வச்சி நொங்க எடுக்கப்போறோம்... உதயநிதி காட்டம்..!

Published : Apr 03, 2021, 01:17 PM IST
பொள்ளாச்சி ஜெயராமன் மகனை உள்ளே வச்சி நொங்க எடுக்கப்போறோம்... உதயநிதி காட்டம்..!

சுருக்கம்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை உள்ளே வைத்து நொங்க எடுக்கப்போகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உறுதிபடக்கூறியுள்ளார்.  

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை உள்ளே வைத்து நொங்க எடுக்கப்போகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உறுதிபடக்கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் கிளறப்படுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் ‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியே வந்து ஜெயராமனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை உள்ளே வைத்து நொங்க எடுக்கப்போகிறோம். பொள்ளாச்சி மக்களே இது உறுதி’’ என அவர் தெரிவித்தார். உதயநிதி இவ்வாறு தெரிவித்து இருந்த நிலையில், மற்றொரு அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தின்போது அடிதடிகளில் ஈடுபட்ட வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திமுக பரப்புரையின் போது அடிதடிகளில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 8 பேர் மற்றும் திமுகவினர் 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!