
இணையதளம் மூலம் நிதி மோசடி செய்யப்படுவது அதிகரித்துவரும் நிலையில், அவற்றைத் தடுக்க சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், இணையதளம் சார்ந்த நிதி மோசடிகளை தடுப்பது தொடர்பான உயர்மட்ட அதிகாரிளுடனுனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உள்துறை, நிதித்துறை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ-வாலட் ஆகியவை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது நடக்கும் மோசடிகள் குறித்து நிபுணர்கள் விளக்கினர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் இணையதளம் மூலம் நிதி மோசடியைத் தடுக்க சட்டம் இயற்ற அரசு முடிவு எடுத்துள்ளது.