
ஆளுநராக வித்யாசாகர் ராவ் செயல்படுகிறாரா அல்லது எடப்பாடி அணியின் அவைத்தலைவராக செயல்படுகிறாரா எனவும், ஆளுநர் வித்யாசாகரின் நடவடிக்கையில் சந்தேகமாக உள்ளது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை.
இதனால் அவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவகள் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சி உழவர் சந்தை அருகே நீட்டை எதிர்த்தும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய டிடிவி தினகரன், ஆளுநராக வித்யாசாகர் ராவ் செயல்படுகிறாரா அல்லது எடப்பாடி அணியின் அவைத்தலைவராக செயல்படுகிறாரா எனவும், ஆளுநர் வித்யாசாகரின் நடவடிக்கையில் சந்தேகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
துரோக கும்பல் ஆட்சியில் நீட்டிக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதாகவும், அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தகுதி நீக்கம் செய்தது தவறு என நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்போம் எனவும், அதிமுகவின் பிரதான எதிரி திமுகதான் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் எப்போது வந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் எனவும், தற்போது தமிழ்நாட்டில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல எனவும் தெரிவித்தார்.