சீல் வைக்கப்பட்ட ரகசிய அறை! துருவி துருவி விசாரணை...! வழக்கு பாயுமா? கைதாவாரா திவாகரன்?

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
சீல் வைக்கப்பட்ட ரகசிய அறை! துருவி துருவி விசாரணை...! வழக்கு பாயுமா? கைதாவாரா திவாகரன்?

சுருக்கம்

Will Diwakaran be arrested?

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 187 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் 1800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

சசிகலாவின் சகோதரர் திவாகரனின்  திவாகரன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமான சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, திவாகரனை, போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். 

சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில், திவாகரனிடம், அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். திவாகரனின் வீடுகளில் சோதனையை முடித்த அதிகாரிகள், கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி, சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணைவீடு, நகரில் உள்ள மற்றொரு வீடு, அவருக்கு சொந்தமான செங்கமலத் தாயார் கல்லூரியில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

கல்லூரியின் காசாளர் அன்புக்கரசி, கல்லூரியை நிர்வகித்து வரும் விநாயகம் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறியதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனிடம் விசாரணையைத் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திவாகரன் மீது வருமான வரித்துறை வழக்கு பாயுமா? அவர் கைது செய்யப்படுவாரா? என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கமலத்தாயார் கல்லூரியைச் சுற்றி திவாகரனின் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புக்காக கல்லூரியைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், கல்லூரியில் உள்ள அறை ஒன்றிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த அறையைத் திறப்பதற்கு சாவி கிடைக்காத நிலையில், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

வேறு வழியே இல்லை... அமெரிக்காவிடம் அடிபணிந்த ஈரான்..! போரை நிறுத்த மாபெரும் நிபந்தனை..!
ஸ்டாலின் ஆட்சியால் தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது.. இபிஎஸ் வேதனை..!