எனக்கு ஒரு நியாயம்... சி.வி.சண்முகத்துக்கு ஒரு நியாயமா..? கொந்தளிக்கும் புகழேந்தி..!

Published : Jul 08, 2021, 10:43 AM IST
எனக்கு ஒரு நியாயம்... சி.வி.சண்முகத்துக்கு ஒரு நியாயமா..? கொந்தளிக்கும் புகழேந்தி..!

சுருக்கம்

ஓ.பி.எஸை பற்றி அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

அதிமுக முன்னாசி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாகவும், தேர்தலில் தோல்வியை சந்தித்ததாகவும் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்தது. முன்னதாக ஓ.பி.எஸை பற்றி அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்ற பாமகவை விமர்சித்து பேசியதற்காக தன்னை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியதைப் போல் சி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு