திமுக அரசுக்கு ஹெச்.ராஜா சவால்... பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பொருளாதாரம் தெரியவில்லையா..?

Published : Jul 08, 2021, 10:21 AM IST
திமுக அரசுக்கு ஹெச்.ராஜா சவால்... பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பொருளாதாரம் தெரியவில்லையா..?

சுருக்கம்

தமிழக நிதியமைச்சருக்கு பொருளாதாரம் தெரியவில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வர மத்திய அரசு தயார். ஆனால், மாநில அரசு தயாரா? 

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வர மத்திய அரசு தயார். ஆனால், மாநில அரசு தயாரா என்பதை, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்க வேண்டும்'' என பா.ஜ.க., தேசிய முன்னாள் செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து சிங்கம்புணரியில் பேசிய அவர், ’’பிரதமர் மோடி ஆட்சி இல்லை என்றால், கொரோனாவால் ஒரு கோடி பேருக்கு மேல் இறந்திருப்பர். மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதில்லை. தமிழக நிதியமைச்சருக்கு பொருளாதாரம் தெரியவில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வர மத்திய அரசு தயார். ஆனால், மாநில அரசு தயாரா? என்பதை தமிழக நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள், மக்களை சுரண்டி தமிழகத்தை கடன் வலையில் சிக்க வைத்துள்ளன. தமிழகம் மாற்றத்தை நோக்கி திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது. ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஏற்கனவே வந்திருக்க வேண்டிய ஒன்று. திரையுலகில் தேசத்திற்கு எதிராகவும், தேச விரோதமாகவும் பேசுவதை கருத்துரிமையாக நினைப்பவர்கள் தான், இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!
மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?