பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம் வாய் திறப்பாரா? நாராயணன் திருப்பதி கேள்வி..!

Published : Feb 14, 2023, 09:56 AM ISTUpdated : Feb 14, 2023, 09:59 AM IST
பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம் வாய் திறப்பாரா?  நாராயணன் திருப்பதி கேள்வி..!

சுருக்கம்

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், கிங் ஃபிஷர், லேன்க்கோ இன்ஃப்ரா, பூஷன் ஸ்டீல், ஜேபி அஸோஸியேட்ஸ், யூனிடெக், மோனெட் இஸ்பாட் மற்றும் ஐவிஆர்சிஎல் போன்ற நிறுவனங்களில் இதே எல்ஐசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததோடு பல நூறு கோடிகளை இழக்க செய்ததா இல்லையா என்பதை தெளிவு படுத்த வேண்டும். 

எல்ஐசி அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதையும் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்பதை முறையே தெளிவுபடுத்தியும் பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுத்து ஜனநாயக படுகொலையை செய்து கொண்டிருக்கின்றன என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.  

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்க்கட்சிகள் நேற்று காலை முதலே தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவையை மார்ச் 13ம் தேதி வரை ஒத்தி வைத்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;- கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை.! காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது- திமுக அரசை விளாசும் அண்ணாமலை

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதானி நிறுவனத்திற்கு கடன் வழங்கியதையும், எல்ஐசி அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதையும் குறிப்பிட்டு, ஐயோ, பொது துறை நிறுவனத்தின் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது என  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, அந்த நிறுவனங்கள் மிக தெளிவாக தாங்கள் எவ்வளவு கடன் கொடுத்தோம், எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதையும் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்பதை முறையே தெளிவுபடுத்தியும் 'குய்யோ, முறையோ' என கூச்சலிட்டு பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுத்து ஜனநாயக படுகொலையை செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், கிங் ஃபிஷர், லேன்க்கோ இன்ஃப்ரா, பூஷன் ஸ்டீல், ஜேபி அஸோஸியேட்ஸ், யூனிடெக், மோனெட் இஸ்பாட் மற்றும் ஐவிஆர்சிஎல் போன்ற நிறுவனங்களில் இதே எல்ஐசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததோடு பல நூறு கோடிகளை இழக்க செய்ததா இல்லையா என்பதை தெளிவு படுத்த வேண்டும். 

இதையும் படிங்க;- யார் இந்த கரூர் கம்பெனி? கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? நாராயணன் திருப்பதி

இந்த நிறுவனங்கள் அனைத்துமே மிக பெரிய இழப்பை பொது துறை நிறுவனங்களுக்கு உண்டாக்கியதற்கு காரணம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தான்  என்று ஏற்றுக்கொள்வார்களா? ஏதோ, பொது துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற நாடகத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிறுத்தி கொள்வதோடு, பொது துறை நிறுவனங்களின் செல்வத்தை, மக்கள் பணத்தை இழக்க செய்ததற்கு மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம்  வாய் திறப்பாரா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!