மாறணும்.. எல்லாமே மாறணும்.. அதுக்கு அதிமுக-பாமகவுக்கு ஓட்டு போடணும்.. டாக்டர் ராமதாஸ் சொல்றதை பாருங்க..!

By Asianet TamilFirst Published Mar 24, 2021, 9:39 AM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரத்தில் பேசினார்.
 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் 38 மாவட்டங்களில் விழுப்புரம்தான் மிகவும் வறுமையில் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் வாழ்வாதாரமே இல்லை. இங்கே குடிசைகள்தான் மிக அதிகமாக உள்ளன. எல்லாவற்றிலுமே விழுப்புரம் கடைசியாகத்தான் இருக்கிறது.


விழுப்புரம் படிப்பில் கடைசி; வறுமையில் கடைசி. ஆனால், மது விற்பனையில் மட்டும் முதலிடத்தில் உள்ளது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் குடும்பத்துக்கு ஒரு வாஷிங் மிஷின் வழங்கப்படும். சூரிய ஒளி அடுப்பு இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1500 வங்கி கணக்குக்கே வரும். இவையெல்லாம் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
படிப்பும் வேலையும்தான் முக்கியம். அதற்காக இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முதல்வர் அனுமதி வழங்கியிருக்காவிட்டால்,  அச்சட்டமே வந்திருக்காது. திமுக ஆட்சிக்கு வந்தால்...  அது எங்கே வரப்போகிறது? ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது. திமுக ஆட்சியில் என்ன நடந்தது? அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. இந்த ஆட்சியில் மின்வெட்டு இல்லை. இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 

click me!