மனைவிகளை மாற்றி உல்லாசம்.. 1000 ஜோடிகள் அட்டூழியம்.. 1 பெண்ணுடன் 3 ஆண்கள்?? அதிர்ச்சியில் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2022, 5:32 PM IST
Highlights

தற்போது அதே போன்ற நிகழ்வு கேரளத்தில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களின் மூலம் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவாக இணைந்து இந்த  இழிசெயலில் ஈடுபட்டு வருவதாக  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கணவர் தன்னை வற்புறுத்துவதாக புகார் அளித்த பெண்ணின் கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தன்னை இயற்கைக்க மாறாக உடலுறவுக்கு வறுப்புறுத்தி வருவதாகவும்,  தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்த உதவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

புகாரை விசாரித்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணிக் கணவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை ஸ்வாப்பிங் குழுக்களில் பரிமாறிக் கொள்ள கட்டாயப்படுத்தியது வெளிச்சதிற்கு வந்தது.  முறகட்டமாக இந்த குழுவில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  'சூப்பிள் ஷேரிங்' குழுவின் ஒரு பகுதியாக தான் இருப்பது ஒப்புக் கொண்ட அந்த நபர் மேலும் தன் மனைவியை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து மனைவிகளை மாற்றி உல்லாசம் ஈடுபடும் கும்பலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் செயலில் பெருங்கும்பல் ஈடுபட்டு வருவதை தெரியவந்துள்ளது. அதில் இதுவரை 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மேலும் ஓரிரு நாட்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் இருப்பதாகவும் அவர்கள் பெண்களை பரிமாறிக் கொள்வதாகவும், கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு பெரிய கும்பல் இருப்பதும் அதில் சில அரசியல் புள்ளிகளும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கும்பல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள டெலிகிராம், மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். முதலில் டெலிகிராம் அல்லது மெசேஞ்சர் குழுக்களில் சேருவதும் பின்னர் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் அவ்வப்போது சந்திப்பதும், அதன் பிறகு மனைவிகளை பரிமாறிக் கொள்வதும் சில நேரங்களில் ஒரு பெண்ணை ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் பகிர்ந்து கொள்வதும் நிகழ்ந்து வருவதாகவும், ஒருநாள் உடலுறவுக்கு பணத்திற்கு பதிலாக சில ஆண்கள் தங்கள் மனைவிகளை வழங்குவதாகவும், அந்தக் குழுவில் சில நேரங்களில் இடம்பெற்றுள்ள தனி உறுப்பினர்கள் பணம் கொடுத்து விரும்பியவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போன்ற சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு காயம் குளத்தில் நடைபெற்று பின்னர் அந்த கும்பலை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அதே போன்ற நிகழ்வு கேரளத்தில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களின் மூலம் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவாக இணைந்து இந்த  இழிசெயலில் ஈடுபட்டு வருவதாக  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும் போலியான சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர், எனவே அவர்களை பிடிக்க கால அவகாசம் தேவைப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குழுவுக்கு மற்ற வேறு ஏதேனும் குழுவுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக கேரள மாநில போலீசார் கூறியுள்ளனர்.
 

click me!