PM Modi inauguration TN: தமிழகத்தில் நாளை 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார் மோடி..

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2022, 4:25 PM IST
Highlights

கடந்த ஏழு ஆண்டுகளில் 60,000 எம்பிபிஎஸ் முதுநிலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மருத்துவக் கல்வியின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி நாட்டிலுள்ள இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி களுக்கான 90 ஆயிரம் இடங்களுடன் 2014 முதல் 60,000 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி சமீபத்தில் கூறினார்.

தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் நேரடியாக வந்து திறந்து வைப்பார் எதிர்பார்க் கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் மாநில அரசும் முனைப்பு காட்டி வந்தது. அதற்கிடையில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி பிரதமர் டெல்லியில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மாலை 4 முதல் 5 மணி வரை அதற்கான நிகழ்ச்சி நடைபெறும் என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி,  திருவள்ளூர், திருப்பூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம், அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி, கல்வி நிறுவனம் நிறுவப்பட வேண்டும் என்ற முயற்சியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய 11 மருத்துவ கல்லூரிகளிலும் 1450 மருத்துவ இடங்கள் உருவாக உள்ளது. பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க உள்ள நிலையில் இது நாட்டில் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை மேலும் ஊக்கபடுத்தும்மென நாளேடுகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.  

இந்நிலையில் மோடி பிரதமர் பதவி ஏற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் 79.6%  அதாவது 51,348  என்ற எண்ணிக்கையில் இருந்து 92,222 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 80. 7% அதாவது 31,185  இடங்களிலிருந்து 56374 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக 2014க்கு முன் மொத்த மருத்துவ இடங்களில் எண்ணிக்கை சுமார் 82 500 ஆக கடந்த இருந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் 80 சதவீதம் அல்லது  66000 இடங்கள் கூடுதலாக உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை அரசு மற்றும் தனியார் இரண்டும் சேர்த்து 387 லிருந்து 596 ஆக உயர்ந்துள்ளது. இது 54 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஏழு ஆண்டுகளில் 60,000 எம்பிபிஎஸ் முதுநிலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மருத்துவக் கல்வியின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி நாட்டிலுள்ள இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி களுக்கான 90 ஆயிரம் இடங்களுடன் 2014 முதல் 60,000 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி சமீபத்தில் கூறினார். கடந்த 70 ஆண்டுகளாக நாடு உருவாக்கிய மருத்துவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில்  உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் வளாகத்தின் காணோளி காட்சி மூலம் தொடக்க விழாவில் பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளில் நாடு உருவாக்கிய மருத்துவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றார். 

மருத்துவத் துறையில் மத்திய அரசு செய்துள்ள பணிகளை பற்றி பேசிய பிரதமர் 66000 மருத்துவ இடங்களுடன் மேலும் பல எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளதாக கூறினார். 2014 வரை நாட்டில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளின் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 ஆயிரமாக இருந்தது, கடந்த ஏழு ஆண்டுகளில் 60 ஆயிரம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 இல் இந்தியாவில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன ஆனால் இன்று நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவ நெட்ஒர்க்கால் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1450 இடங்கள் அதிகரிக்க உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!