இந்து கோவில்களை அழிக்க திமுக துடிக்கிறது... ஹெச்.ராஜா ஆவேசப் பேட்டி..!

Published : Jan 11, 2022, 05:08 PM IST
இந்து கோவில்களை அழிக்க திமுக துடிக்கிறது... ஹெச்.ராஜா ஆவேசப் பேட்டி..!

சுருக்கம்

ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் இறப்பதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். ஒவ்வொரு கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்து விட்டா கும்பாபிஷேக நடத்த முடியும்?

இந்து கோவில்களை அழிக்க திமுக துடிக்கிறது என பாஜக தலைவர்களுல் ஒருவரான ஹெச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரை எட்டு மாதங்கள் ஆகிறது. இத்தனை நாட்களாக ஒரு கோயில் யாவை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? திமுக அரசுக்கு சொல்கிறேன் ஹிந்துக்கள் அனாதைகள் அல்ல. ஆராய்ச்சி நடத்த 16 கோவில் உள்ளன. 3 மாதத்தில் 6014 கோயில்களையும் என்னால் சரி செய்ய முடியும். உலகம் முழுவதும் உள்ள இந்து சமுதாயம் தயாராக இருக்கிறது.ஆனால் அதற்கு அனுமதி கொடுக்க லஞ்சம் கேட்கிறார்கள். நேரத்துடன் இடத்துடன் அதை சொல்ல முடியும். கும்பகோணம் பக்கத்தில் உள்ள திட்டக்குடி. ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் இறப்பதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். ஒவ்வொரு கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்து விட்டா கும்பாபிஷேக நடத்த முடியும்?

பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது, இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது. இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படு தோல்வி அடைவது உறுதி. பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!