வீரப்பனின் சகோதரரை ஏன் விடுதலை செய்யவில்லை..? ராமதாஸ் போர்க்குரல்..!

By Thiraviaraj RMFirst Published Nov 26, 2021, 12:05 PM IST
Highlights

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ‘’அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்; அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை  செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த  வகையிலும் நியாயமல்ல!

74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப் பட்டு இருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட  நாளான இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்தியாவில் அனைத்தையும் விட உயர்ந்தது அரசியலமைப்புச் சட்டம் தான்... இந்தியாவை இயக்குவது அரசியலமைப்புச் சட்டம் தான்... இறையாண்மை அளிப்பதும் அரசியலமைப்புச் சட்டம் தான். அத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம்... இந்தியாவை உயர்த்துவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்

click me!