ஒரு தொகுதிக்கு தமாகா ஒத்துக்கொண்டது ஏன்...? அதிமுக - தமாகா கூட்டணி உருவான பின்னணி!

By Asianet TamilFirst Published Mar 14, 2019, 10:07 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை தமாகா ஏற்றுக்கொண்டதில் உள்ள பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 


அதிமுக கூட்டணியில் தமாகாவும் இடம் பெற வேண்டும் என்று அதிமுக விரும்பியது. அதிமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளையும் 1 மாநிலங்களவை பதவியையும் தமாகா எதிர்பார்த்தது. ஆனால், அதிமுக தரப்பில் தேமுதிக கூட்டணிக்கு வராமல் இருந்தால், 2 மக்களவைத் தொகுதிகளைத் தருவதாக தமாகாவிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றதால், தாமாகவுக்கு எத்தனை தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரே ஒரு சீட்டை ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தானது. கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி  தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொகுதியில் ஜி.கே. வாசன் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஒரே ஒரு தொகுதியை தமாகா பெற்றதால் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு தொகுதியைப் பெற்றதற்கு பதிலாக தமாகா தனித்து போட்டியிருக்கலாம் என்று அக்கட்சி தொண்டர்கள் தலைமையிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தொண்டர்களை சமாதானப்படுத்திய கட்சித் தலைமை, ‘உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவுக்கு கணிசமாக இடம் வழங்குவதாக அதிமுக தலைமை உறுதியளித்திருப்பதாகவும், அப்போது கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறி அனுப்பிவைத்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துதான் தமாகா ஒரு சீட்டுக்கு அதிமுக கூட்டணிக்கு ஒத்துக்கொண்டுள்ளது என்பது தெரிகிறது. இதேபோல தேமுதிகவுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களை அதிமுக ஒதுக்கும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
 

click me!