40 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளருக்கு கூட வாய்ப்பில்லை...! அதிமுக கூட்டணி மீது பரபரப்பு புகார்..!

By Selva Kathir  |  First Published Mar 14, 2019, 9:49 AM IST

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடே நிறைவு பெறாத நிலையில் அந்த கூட்டணியில் எந்த ஒரு முஸ்லீம் வேட்பாளருக்கும் இடம் கிடைக்காத நிலை நிலவுவதாக தகவல்களை கொளுத்துவிட்டுள்ளனர்.


அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடே நிறைவு பெறாத நிலையில் அந்த கூட்டணியில் எந்த ஒரு முஸ்லீம் வேட்பாளருக்கும் இடம் கிடைக்காத நிலை நிலவுவதாக தகவல்களை கொளுத்துவிட்டுள்ளனர்.

சுமார் நாற்பது தொகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும் ராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் தான் பெரும்பாலும் இஸ்லாமிய வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்துவது வழக்கம். வேறு எந்த தொகுதியிலும் பிரதான அரசியல் கட்சிகளான திமுகவோ, அதிமுகவோ முஸ்லீம்களை நிறுத்துவதில்லை. விதிவிலக்காக தேனி தொகுதியில் ஹாரூனுக்கு இரண்டு முறை காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது. இது தவிர சமீக காலத்தில் முஸ்லீம்கள் வேலூர், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் மட்டும் தான் பிரதான கட்சிகளால் நிறுத்தப்பட்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் அதிமுக தொகுதி உடன்பாட்டின் படி வேலூர் ஏ.சி.சண்முகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தொகுதியில் ஏ.சி.சண்முகம் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவார். இதனால் வேலூரில் முஸ்லீம் வேட்பாளரை அதிமுகவால் நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதே போல் ராமநாதபுரம் தொகுதியில் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அன்வர் ராஜாவும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு அமைச்சர் மணிகண்டனுக்கு நெருக்கமான ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இதே போல் மயிலாடுதுறை தொகுதி வாசனுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி வாசன் கட்சிக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டால் அங்கு வாசனே களம் இறங்குவார் எனவே அங்கும் இஸ்லாமிய வேட்பாளருக்கு அதிமுக கூட்டணியில் இடம் இல்லை. அதே சமயம் வாசனுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படவில்லை என்றாலும் சிட்டிங் எம்பியான பாரதி மோகனுக்கு தான் அங்கு வாய்ப்பு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அதிமுகவே இஸ்லாமிய வேட்பாளரை களம் இறக்கவில்லை என்றால் கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இல்லை. எனவே இஸ்லாமிய வேட்பாளர்களே இல்லாமல் இந்த தேர்தலை அதிமுக கூட்டணி எதிர்கொள்ள உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

click me!