திமுக எம்எல்ஏவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..? ஓட ஓட விரட்டிய பொது மக்கள்.. ஸ்டாலின் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2020, 12:37 PM IST
Highlights

திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பனின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பெரிய கருப்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன குன்றக்குடியில் ரேஷன் கடை திறப்பு விழாவின் போது திமுக சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், சின்ன குன்றக்குடியில் புதிய நியாய விலை கடை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் அதிமுக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் மற்றும் கழக நிர்வாகிகளும் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெகநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் குன்றக்குடி அடிகளார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பெரிய கருப்பன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பொதுமக்களை தகாதவார்த்தைகளில் பேசியதுடன், அறையைவிட்டு வெளியில் செல்லும்படி  கூச்சலிட்டு தகராறு செய்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரிய கருப்பனின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பெரிய  கருப்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர். 

சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனுக்கு எதிராக கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொது மக்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அரசு விழாவில் தலையிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் தகராறு செய்து பொதுமக்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!