கொரோனா நீங்கி தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது..!! முதலமைச்சர் எடப்பாடியார் அதிரடி தகவல்.

Published : Nov 11, 2020, 12:01 PM IST
கொரோனா நீங்கி தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது..!! முதலமைச்சர் எடப்பாடியார் அதிரடி தகவல்.

சுருக்கம்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிற இந்த கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் தமிழகத்திலும் பரவி இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மாவின் அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக படிப்படியாக வைரஸ் நோய் தொற்று குறைந்து இன்றைக்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.

அம்மா அரசின் சரியான அணுகுமுறையால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:  அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இன்று தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது. 

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிற இந்த கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் தமிழகத்திலும் பரவி இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மாவின் அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக படிப்படியாக வைரஸ் நோய் தொற்று குறைந்து இன்றைக்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக வேளாண்மைத் தொழிலுக்கு முழுமையாக விளக்கு அளிக்கப்பட்டு எவ்வித தடையும் இல்லாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வழங்கி அதன் விளைவாக வேளாண் பெருமக்கள் முழு மூச்சில் வேளாண் பணிகளை மேற்கொண்ட காரணத்தினால் தமிழகத்தில் நல்ல விளைச்சலைப் பெற்று உள்ளோம். 

தொழில் துறையைப் பொருத்தவரை படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் நூறு சதவீத தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்கலாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கியுள்ளன. முழு அளவில் பணியாளர்களை வைத்து பல்வேறு தொழில்களும் இயங்கி வருகின்றன. மொத்தத்தில் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு  திரும்பிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!