எடப்பாடியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை - வாண்டடாக வம்புக்கு இழுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்...

First Published Apr 30, 2017, 7:49 PM IST
Highlights
Why the Chief Minister did not inquire into the money laundering case


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டவாடா நடைபெற்ற விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. பல்வேறு கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் இறங்கினர்.

மேலும் அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஒ.பி.எஸ் அணி, தினகரன் அணி என வாக்கு சேகரிப்பில் இறங்கியது.

இதில் தினகரன் தரப்பில் ஏரளாமான பணபட்டுவாட நடைபெறுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் தினகரன் அணியை சேர்ந்த பலர் கையும் களவுமாக தேர்தல் ஆணையத்திடம் சிக்கினர். இதனால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து அதிமுக வின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தற்போது கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டவாடா நடைபெற்ற விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 6 அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது. ஆனால் இதுபற்றி தேரதல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

click me!