
அதிமுகவின் இரு அணிகளும் ஒரு குடும்பமாக இணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக எடப்பாடி அணி மற்றும் ஒ.பி.எஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.
இரு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தள்ளி கொண்டே போகிறது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து எடப்பாடி அணியில் குழுவும் அமைக்கப்பட்டது.
அதைதொடர்ந்து ஒ.பி.எஸ் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடந்தபாடில்லை.
காரணம், ஒ.பி.எஸ் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து முழுமையாக அதிர்கார பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து டிடிவி தினகரன் கட்சியில் இருந்து விலகினார். பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பில் தெரிவித்தனர்.
பின்னர், தற்போது யார் முதல்வர் என்ற போட்டி நிலவுவதாக தெரிகிறது. எடப்பாடி அணி தரப்பில் தொடர்ந்து அமைச்சர்கள் எடப்பாடியே முதலமைச்சர் என போகும் இடத்திலெல்லாம் பேட்டி அளித்து வருகின்றனர்.
இதனால் ஒ.பி.எஸ் தரப்பில் முதலமைச்சர் பதவி கேட்கபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்நிலையில், ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
அதிமுகவின் இரு அணிகளும் ஒரு குடும்பமாக இணைய வேண்டும்.
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் விசாரணையை துரிதபடுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.