
ஜெயலலிதாவின் கோபம், யாருக்கும் மன வலியை தந்ததில்லை. ஏனெனில் அவரது ஆளுமை அப்படிப்பட்டது.
சசிகலாவும், அவரது உறவுகளும், அவமானப்படுத்தும் போது, அதை தாங்கமுடியாமல், வெறுத்து போயினர் அமைச்சர்கள்.
ஜெயலலிதா இறந்து, கட்சியும், ஆட்சியும் சசிகலாவின் கைக்கு வந்த பின்னர், சசிகலா உறவினர்கள் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா..
அமைச்சர்கள் முதல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை, பலரையும் தினகரன் ஒருமையில் அழைப்பதையும், “வாய்யா, போய்யா” என்று பேசுவதையும் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அவர்தான் அப்படி பேசுகிறார் என்றால், அவர் குடும்பத்து நண்டு, சிண்டுகள் கூட நம்மை ஒருமையில் பேசுவதை கேட்கும் போது அப்படியே இதயமே நொறுங்குவது போல இருக்கும் என்று ஒரு அமைச்சர் கண்ணீரே விட்டு விட்டார்.
இன்னும் சில அமைச்சர்களோ, துறையில் ஒரு சிறிய டெண்டர் விட்டால் கூட, உறவு, நட்பு என்று யாரையாவது அனுப்பி, தினகரன் அதை பெற்றுக் கொண்டு விடுகிறார்.
அதனால், டெண்டர் பெறுபவர்களிடம் எதுவும் வாங்க முடியாமல், சொந்த பணத்தை கொண்டு தினகரனுக்கு கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது என்றும் புலம்பி உள்ளனர்.
இந்த நிலையில், சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டபோது, அதிக மகிழ்ச்சி அடைந்தவர்கள் அமைச்சர்களே.
அதன் பிறகே, அணிகள் இணைப்பு விஷயமும், சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு அப்புறப்படுத்தும் விஷயமும் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.