"இரட்டை இலையை மீட்க நாங்கள் லஞ்சம் கொடுக்கவில்லை" : மாஃபா பாண்டியராஜன்

First Published Apr 21, 2017, 12:21 PM IST
Highlights
mafoi says that they didnt gave bribe for irattai ilai


இரட்டை இலை சின்னத்தை மீட்க நாங்கள் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக லஞ்சம் பெற்றதாக கூறி டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற இடைத் தரகரை கடந்த 17 ஆம் தேதி டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா, "இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தங்கள் தரப்பு லஞ்சம் எதுவும் கொடுக்க முயற்சிக்கவில்லை" என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து முனுசாமி கூறியுள்ள கருத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்று வைத்திலிங்கம் கூறினார் என்றும் அவர் கூறியுள்ளார்.

click me!