தீபா தொடங்கியது பேரவை…. நான் தொடங்கியிருப்பது கட்சி… மாதவன் காமெடி

First Published Apr 21, 2017, 12:10 PM IST
Highlights
deepa hubby madhavan started a new party


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர்  ஜெ ஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வி செய்யப்பட்டார். சசிகலாவை விரும்பாத லட்சக்கணக்கான தொண்டர்க்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

ஆனால் தீபா தொண்டர்களை உதாசீனப்படுத்தி தாமதித்தால் தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் திரும்பத் தொடங்கினர். ஆனால்  தீபா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி எம்ஜிஆர் ஜெயலலிதா  தீபா பேரவை என்ற அமைப்பைத தொடங்கினார்.

இந்த பேரவை தொடங்கிய போது தீபாவுக்கும் அவரது கணவருக்கு பிரச்சனை ஏற்பட்டு தனியாக பிரிந்த சென்றார்.

இந்நிலையில் இன்று எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று வந்த மாதவன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் எம்.ஜி.ஆர்  ஜெ ஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

இதனையடுத்து அக்கட்சியின் சின்னம் மற்றும் கொடியை மாதவன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பதவி மற்றும் பொறுப்புக்காக அலைபவர்களாக இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கு ஒரு தன்னலமற்ற தலைவர் வேண்டும் என்றும் அது நானாக மட்டுமே இருக்க முடியும் என மாதவன் காமெடி செய்தார்.

மேலும் தீபா தொடங்கிருப்பது கட்சியல்ல, பேரவை. னா தொடங்கியிருப்பதுதான் கட்சி என்று தெரிவித்தார்.
உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவளிப்பாரா என்ற கேள்விக்கு அதை நீங்களே அவரிடம்தான் கேட்க வேண்டும் என மாதவன் தெரிவித்தார். 


 

click me!