ரூ.15 லட்சம் தர்றதா பொய் சொன்னோம்... மக்களும் நம்பி ஓட்டுபோட்டுடாங்க... மத்திய அமைச்சர் பகீர் தகவல்...!

By vinoth kumarFirst Published Oct 10, 2018, 10:29 AM IST
Highlights

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்பதாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதியை அள்ளி வீசினார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்பதாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதியை அள்ளி வீசினார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். இவரது இந்த பேச்சு தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிதின் கட்காரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒளிபரப்பானது. 

அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசுகையில் கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனாலேயே நாங்கள் பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள். அதனால் தான் நாங்கள் அதுபற்றி கேட்டால் சிரித்து விட்டு, நகர்ந்து விடுகிறோம் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.

 

நிதின் கட்கரியின் இந்த பேட்டியை இணையத்தில் வைராகி வருகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 போலி வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளார். 5 மாநிலங்களில் நவம்பம் மற்றும் டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதின் கட்கரியின் இந்த கருத்து பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

click me!