
மத்திய அரசை கண்டு மாநில அரசு பயப்படுவது ஏன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் குழப்பங்களில் மாநில அரசு திகைத்து போய் செயல்பட முடியாமல் தவித்து வருகிறது.
முத்லாமைச்சர் எடப்பாடிக்கு உள்கட்சியினர், எதிர்கட்சியினர், வெளிக்கட்சியினர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து திணறடித்து வருகின்றனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி செய்வதறியாமல் கடும் கோபத்தில் உள்ளாராம். தமிழக முக்கிய பிரமுகர்கள் மீது மத்திய அரசு மேலதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
போததகுறைக்கு அவர் தரப்பில் இருக்கும் அமைச்சர்களே அவருடைய காலை வார நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் எனவும், ஊடகங்கள், பொதுக்கூட்டங்களில் கூட விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் மாநில அரசுக்கு இணக்கமான சூழல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது எனவும், மத்திய அரசை கண்டு மாநில அரசு பயப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், பன்னீர்செல்வம் அணியுடன் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.