இன்னும் ஓபிஎஸ் ஆட்டம் முடியவில்லை? தீர்ப்பில் சாதகம் என்ன? மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? இதோ முழு விவரம்.!

By vinoth kumar  |  First Published Mar 28, 2023, 2:50 PM IST

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்,  மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  குமரேஷ் பாபு தள்ளுபடி செய்தது ஏன் என்ற தீர்ப்பின் விவரம் முழு விவரம் வெளியாகியுள்ளது. 


ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானம் குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்,  மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  குமரேஷ் பாபு தள்ளுபடி செய்தது ஏன் என்ற தீர்ப்பின் விவரம் முழு விவரம் வெளியாகியுள்ளது. 

Latest Videos

* கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை என ஓபிஎஸ் தரப்பினர்  முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது.

* ஏனென்றால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமித்த தீர்மானங்களும் செல்லும். 

* ஓபிஎஸ் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும். 

* ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். 

* தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால்  வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும்.

* பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும்  தடை விதித்தால், அது ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும் என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

click me!