கிரகணத்தை பார்த்து கடவுளுக்கு ஏன் பயம் என்று திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
கிரகணத்தை பார்த்து கடவுளுக்கு ஏன் பயம் என்று திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். கிரகண மூட நம்பிக்கை ஒழிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கர்ப்பிணி பெண்கள் பலர் பங்கேற்று உணவருந்தினர். பின்னர் பேசிய திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, நம்ம நாடு எவ்வளவு பிற்போக்காக இருக்கிறது என்பதற்கு அடையாளமே கிரகண மூட நம்பிக்கை தான். எந்த நாட்டிலாவது கிரகணத்தன்று கருவுற்ற தாய்மார்கள் வெளியே வராமல் யாரும் இருக்கிறார்களா? சாப்பிடாமல் இருக்கிறார்களா?
இதையும் படிங்க: கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா
இங்கே தான் சாப்பிடக்கூடாது, மத்தியமே வீட்டிற்கு போக வேண்டும், குளிக்க வேண்டும் என்று எல்லாம் சொல்கிறார்கள். இப்படி சொல்வது யார்? சந்திரன், சூரியன் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதனால் ஏற்படுவது தான் கிரகணம் என்று சொல்லிக் கொடுக்கக்கூடிய அறிவியல் ஆசிரியர். விஞ்ஞான ஆசிரியர் அங்கு விஞ்ஞானத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு வீட்டில் வந்து தர்பன புல்லை எடுத்த குழம்பில் போடுகிறார்கள்.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்
இந்த மாதிரி இரட்டை மரபு கொண்ட மாதம் அறிவியலோ, மதத்தை ஒட்டிய மூட நம்பிக்கைகளோ தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். இந்த அறிவை கொளுத்தியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார். கிரகணத்தன்று திருப்பதி கோயில் உட்பட அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. கிரகணத்தை பார்த்து மக்கள் பயம் கொள்ளவில்லை. கடவுளை பயம் கொள்ள வைத்துள்ளார்கள். கிரகணத்தை பார்த்து கடவுளுக்கு ஏன் பயம் என்று தெரிவித்துள்ளார்.