கோவை சிலிண்டர் விபத்து பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நேற்றைய முன் தினம் அதிகாலை மாருதி காரில் சிலிண்டர் வெடி விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் மர்ம பொருளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது அதன் அடிப்படையில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
undefined
இதையும் படிங்க..சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்
இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், ‘கோவையில் 23 ம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல திட்டமிட்ட பயங்கர வாத சதிச் செயல். 5 நபர்கள் கைது என்று கோவை கமிஷ்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல். சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame’ என்று பதிவிட்டுள்ளார்.
கோவையில் 23 ம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல திட்டமிட்ட பயங்கர வாத சதிச் செயல். 5 நபர்கள் கைது என்று கோவை கமிஷ்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல். சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame
— H Raja (@HRajaBJP)இதையும் படிங்க..Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
இதையும் படிங்க..ஹரிஜன்.! ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம் !