எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் கொடுத்த வேற லெவல் விளக்கம்..!

By vinoth kumar  |  First Published Oct 27, 2022, 6:39 AM IST

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கடந்த  முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை.


ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் போனபிறகு முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் ஓபிஎஸ் அவர்களே கவனித்து கொண்டார்.  அதில் விஜயபாஸ்கர் பங்கு எதுவும் இல்லை என முன்னாள் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கடந்த  முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா.. இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லாத இபிஎஸ்..!

இந்நிலையில், அக்டோபர் 30ம் தேதி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது போலீஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகதத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மனு கொடுத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சென்னையாக இருந்தாலும் ராமநாதபுரமாக இருந்தாலும் தேதவர் ஐயாவுக்கு புகழ் மாலை செலுத்த வேண்டும். அந்த வகையில் நந்தனதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். கடந்த காலத்திலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரம் பசும்பொன்னிற்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்துவோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற பிறகு அதிமுக சார்பாக பொதுக் கூட்டம் நடத்தி இருக்கிறோம். கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். பொன்விழா ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடி இருக்கிறோம். இதுபோல் ஓபிஎஸ் ஏதாவது செய்திருக்கிறாரா? சிம்பிளாக ஏதோ அறிக்கை விட்டிருக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்ததே உண்மை வெளிவரவேண்டும் என்பதற்குத்தான்.

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் போனபிறகு முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் ஓபிஎஸ் அவர்களே கவனித்து கொண்டார்.  அதில் விஜயபாஸ்கர் பங்கு எதுவும் இல்லை. சசிகலா, ஓபிஎஸ் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் விசாரணை அறிக்கையின் முடிவே இருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையின் கடைசியில் இடம்பெற்றிருந்த திருக்குறளைப் பார்த்து தமிழ்நாடே கண்ணீர் சிந்தக்கூடிய நிலைதான் இருக்கிறது. என் மீது எந்த புகார் வந்தாலும் நான் சட்டப்படி சந்திக்க தயார் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என ஜெயக்குமார் கூறியுள்ளார். ஓபிஎஸ் Vs எடப்பாடி.. 2 பேருமே கிடையாது.! முத்துராமலிங்க தேவர் தங்க கவச வழக்கில் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு

இதையும் படிங்க;- 

click me!