திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ராமர் பாலத்தை பற்றி சொன்ன கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் உணவு சாப்பிடக்கூடாது என்ற மூட நம்பிக்கையை உடைக்கும் விதத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
கி.வீரமணி பேச்சு:
அப்போது பேசிய அவர், ‘இந்நிகழ்ச்சியில் அனைவரும் சிற்றுண்டியை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சாப்பிடுவதற்காக காரணம் எண்களின் கொள்கையை வலியுறுத்துவதாகத் தான். மூட நம்பிக்கைகளை உடைப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். சாதி மறுப்பு திருமணம் நடத்தவேண்டும் என்றாலும் செய்து வைப்போம்.
ராமர் பாலம்:
இப்படி செய்வதே சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு என்பதற்கு பொருளாக மக்களுக்கு காட்டுகிறோம். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே ராமர் பாலம் கட்டியிருந்தால், அதை யாராலும் உடைத்திருக்க முடியாதே. அதுபோக, ராமர் அப்பாலத்தை கட்டியிருந்தால் அனுமன் பாலம் வழியாகவே லங்கைக்கு சென்றிருக்கலாமே? ஏன் லங்கைக்கு பறந்து செல்ல வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா
நாராயணன் திருப்பதி:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், ‘ராமர் பாலம் கட்டியிருந்தால் யாராலும் இடிக்க முடியாதே?" "ராமர் பாலம் கட்டியிருந்தால் அனுமார் என் பறந்து சென்றார்" "ராமர் பாலம் வழியாக அனுமார் சென்றிருக்கலாம், அனுமார் ஏன் பறந்து சென்றார்? - பதில் வேண்டும்": கி.வீரமணி.
ஓசி சோறு:
ஈ.வெ.ரா அவர்கள் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள்.இருந்தும், ஆயிரம் வசதி, வாய்ப்புகள் இருந்தும், இன்னும் திமுக விலும், அதிமுக விலும் வீரமணி ஏன் 'ஓசி சோறு' திண்ண வேண்டும் என்று நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்ட தயா அழகிரிக்கு முதலில் பதில் சொல்லி விட்டு கேள்விகளை கேளுங்கள்.'ஓசி சோறுக்கே' இவ்வளவு நாக்கொழுப்பா? என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க..ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?