இனி அந்த சாதி ஓட்டு நமக்கு கிடைக்காது… கருணாசைத் தூக்கி உள்ள போடு … அதிரடி முடிவெடுத்த இபிஎஸ் !!

Published : Sep 26, 2018, 08:30 PM IST
இனி அந்த சாதி ஓட்டு நமக்கு கிடைக்காது… கருணாசைத் தூக்கி உள்ள போடு … அதிரடி முடிவெடுத்த இபிஎஸ் !!

சுருக்கம்

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ் சாதி ரீதியாக பேசியபோது கொந்தளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனி அந்த சாதி ஓட்டுக்கள் டிடிவி பக்கம் போய்விடும், மற்ற சாதி ஓட்டுக்களையாவது வாங்க முயற்சி செய்வோம் என முடிவெடுத்ததாகவும், உடனடியாக கருணாசைத் தூக்கி உள்ளே போட உத்தரவிட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஓராண்டுக்குமேல் இபிஎஸ்க்கும் கருணாசுக்கும் இடையே டெர்ம் சரியில்லாமல்தான் இருந்துள்ளது. டிடிவியுடனா நெருக்கம், ஸ்டாலின் கூட பேச்சு வார்த்தை, சசிகலாவுடன் அடிக்கடி சந்திப்பு என கருணாசின் தொடர்புகள் அதிகரித்துக் கொண்டே போனது அவருக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் தான் வள்ளுவர் கோட்டத்தில் கருணாசின் சர்ச்சைப் பேச்சு அரங்கேறியது. அவரது பேச்சு நாடார் சமூகத்தை அதிகமாக புண்படுத்தியுள்ளதாகவும் , அந்த மக்கள் கொந்தளித்துப் போயிருப்பதாகவும் உளவுத் துறையின் தகவல்கள் இபிஎஸ்ஐ எட்டியது.

உடனடியாக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி மற்றும் உயரதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்திய முதலமைச்சர்,  சில அதிரடி முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர் வாக்குகள் இனி கண்டிப்பாக சசிசகலா-டிடிவி தரப்புக்குத்தான் போகும் என்றும் அதனால் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கருணாசை கைது செய்வதால் மற்ற சாதி ஓட்டுக்களை அறுவடை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது, இதையெல்லாம் கணக்குப் போட்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக கருணாசை தூக்க போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!