மீண்டும் கருணாஸ் கைது... மேலும் 2 வழக்குகள் போட்டதால் சிக்கல் மேல் சிக்கல்...

Published : Sep 26, 2018, 08:14 PM IST
மீண்டும் கருணாஸ் கைது... மேலும் 2 வழக்குகள் போட்டதால் சிக்கல் மேல் சிக்கல்...

சுருக்கம்

கடந்த ஏப்ரலில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தின் போது சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு எதிரே திரண்ட கருணாசின் புலிப்படை தொண்டர்கள் கிரிக்கெட் ரசிகர்களை சரமாரியாக அடித்து தாக்கினர்.

கடந்த ஏப்ரலில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தின் போது சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு எதிரே திரண்ட கருணாசின் புலிப்படை தொண்டர்கள் கிரிக்கெட் ரசிகர்களை சரமாரியாக அடித்து தாக்கினர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் மேலும் 2 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அடித்து வெளுத்து விடுவேன்... டிசி அரவிந்தன் டவுசரை கழட்டி விடுவேன் வன்னியர்கள் மிகவும் குறைவு, ராமதாஸ் பொய் சொல்கிறார், நாடார் பிராமின் மட்டுமே பத்திரிக்கை நடத்துகிறான், எடப்படிக்கு முதலமைச்சர் பதவி நாங்கள் போட்ட பிச்சை, இப்படியெல்லாம் வாய்க்கு வந்தது உளறி, எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். திருவாடானை MLA கருணாஸ்.

ஆனது ஆச்சு, அட்லீஸ்ட் பிரச்சனைக்கு பிறகாவது வாயை மூடினாரா? இல்லவே இல்லை! நான் சீவலப்பேரி பாண்டி வம்சத்தை சேர்ந்தவன் துப்பாக்கிக்கு நெஞ்சை காட்டுவேன், கைதுக்கு அனுமதி வாங்கியாச்சா? என கூவு கூவு என கூவிவிட்டார். இதோடு விட்டாரா இல்லை, வேலூர் ஜெயிலுக்கு கொண்டு போனதுக்கு அப்பறமும், அவரை பார்க்க வந்தவர்களிடம் அரசை கடுமையாக விமர்சித்தாராம். சும்மா விடுவார்களா? இதோ பாய்ந்தது மேலும் இரண்டு வழக்குகள்.

கடந்த  மாதம் காவிரி பிரச்சனையின் போது தமிழகத்தில் IPL கிரிக்கெட் போட்டிகள்  நடத்தக் கூடாது என தமிழ் அமைப்புகள்  பல போராட்டங்கள் நடத்தினர். சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே  கருணாசின் ஆதரவாளர்கள். கிரிக்கெட் ரசிகர்களின் பனியனை கழற்றியதோடு மட்டுமல்லாமல் சரமாரியாக அடித்து உத்தனர். அப்போது கையில் புலிப்படை கொடிகளை எந்தியவாரு கோஷங்களை எழுப்பி சென்றனர் அவரது ஆதரவாளர்கள்.  அந்த வீடியோவை ஆதாரங்களாக கொண்டு அடிவாங்கிய இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்கிற வகையில் வாய்க்கு வந்ததை பேசி உளறிக் கொட்டி, பழைய பிரச்சனைகளையும் கிளறி எடுக்க வைத்துவிட்டார் கருணாஸ். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!