ரஜினிகாந்தை ஏன் சந்தித்தார் உளவுதுறை அதிகாரி..!! பரபரப்பை கிளப்பும் அரசியல் கட்சிகள்.

Published : Feb 29, 2020, 09:37 PM IST
ரஜினிகாந்தை ஏன் சந்தித்தார் உளவுதுறை அதிகாரி..!! பரபரப்பை கிளப்பும்  அரசியல் கட்சிகள்.

சுருக்கம்

உளவுபிரிவு அதிகாரி நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

T>Balamurukan

உளவுபிரிவு அதிகாரி நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசியபோது, 'சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த தி.க. பேரணியில் ராமர்சீதை  படங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக பேசியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம்,திமுக,அதிமுக அமைச்சர்கள்,பாமக,நாம்தமிழர் மற்றும் தழிழ்தேசிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க கோரி போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

 மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்தார்.என்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தன்னுடைய கொள்ளையில் முடிவாக இருந்தார் ரஜினி.இதன் தொடர்ச்சியாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்தநிலையில் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டில் 5 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது வீட்டில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்கி கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ரஜினிகாந்தை அவரது வீட்டில் சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு இன்று சந்தித்தார்.அப்போது போலீஸ் பாதுகாப்பு குறித்து ரஜினியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதுகாப்பில் உள்ள 5 போலீசாரின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!