மதுரை மாநகராட்சி பணக்காரர்கள் நடத்தும் பள்ளிகள் பக்கமே போகாது.!! வரி பாக்கி 40கோடி.!! கொழிக்கும் அதிகாரிகள்.!

By Thiraviaraj RMFirst Published Feb 29, 2020, 8:08 PM IST
Highlights

மதுரை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு....!! வீட்டு வரி, தண்ணீர் குழாய் வரி, சொத்து வரி, தொழில் வரி கட்டாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் செலுத்தி விட வேண்டும்.இல்லையென்றால் தண்ணீர் குழாய் துண்டிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை இப்படி தெருத்தெருவாக ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யும் மாநகராட்சி. வரி கட்டாத அப்பாவி மக்களின் வீடுகளில் வரி கட்டவில்லை என்பதற்காக தண்ணீர் குழாயை துண்டிப்பதும், மிரட்டுவதுமாக இருக்கிறது.

T.Balamurukan

மதுரை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு....!! வீட்டு வரி, தண்ணீர் குழாய் வரி, சொத்து வரி, தொழில் வரி கட்டாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் செலுத்தி விட வேண்டும்.இல்லையென்றால் தண்ணீர் குழாய் துண்டிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை இப்படி தெருத்தெருவாக ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யும் மாநகராட்சி. வரி கட்டாத அப்பாவி மக்களின் வீடுகளில் வரி கட்டவில்லை என்பதற்காக தண்ணீர் குழாயை துண்டிப்பதும், மிரட்டுவதுமாக இருக்கிறது.

மதுரை மாநகராட்சியே! வரி வாங்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை வரி வசூல் செய்வதில் பாரபட்சம் காட்டாதே! என தான் மதுரை மக்கள் கேட்டு கொள்கிறோம். மெத்த படித்த அலுவலர்களே! உங்களிடம் ஒரு கேள்வி 50,000 பேரை தொந்தரவு செய்து 30,00,00,000 ( முப்பது கோடி ) வசூல் செய்வது சுலபமா ? 100 பேரிடம் 40,00,00,000 ( நாற்பது கோடி ) வசூல் செய்வது சுலபமா ?   மதுரை மாநகராட்சியில் சொந்த வீடு வைத்து இருக்கும் பலரும் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் வரி வசூல் செய்யும் நபர்களிடம் சிக்கி பல ஏச்சுக்கும், பேச்சுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். சாமானிய மக்களிடம்  2000 ரூபாய்க்கு மல்லுக்கு நிற்க்கும் அதிகாரிகள், மதுரையில் இருக்கும் பிரபல பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் வணிக நிறுவனங்கள் கட்ட வேண்டிய வரிகளை வசூல் செய்யாமல் அதிகாரிகளின் பாக்கெட்களை நிரப்பிக் கொண்டு செல்லுகின்றனர்.

 ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ,கல்லூரிகளில் அந்தந்த பகுதியில் வருவாய் ஆய்வாளர்கள் முதல் மேல் அதிகாரிகள் வரைக்கும் சீட் ஒதுக்கி கொடுக்கிறார்கள். இதில் கிடைக்கும் வருமானம் அதிகாரிகளுக்கு லாபம்,வரிவசூல் செய்து மாநகராட்சிக்கு கொடுத்தால் யாருக்கு லாபம்.இதையெல்லாம் கணக்கு பார்க்கும் அதிகாரிகள் தனக்கு லாபம் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.வரி வசூலில் பாரபட்சம் கிடையாது.வரி பாக்கியோ,வரி வசூலோ செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை இருந்தால் இதுபோன்ற வரிபாக்கி இருக்க வழியில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


மாநகராட்சிலேயே வரி பாக்கியில் முதல் இடம் பிடித்த ரூபாய் 4,00,57,183 (056/01301) வரி பாக்கி வைத்து இருக்கும் வேலம்மாள் மருத்துவமனை அதிபர் முன்பு கை கட்டி நிற்பார்கள் இது மட்டுமா ? (அடைப்பு குறிக்குள் அவர்களது வரி விதிப்பு எண்கள் உள்ளன)


2.சாய்ராம் பள்ளி - வரிபாக்கி ரூபாய் 3,35,13,860 ( 042/02961 )

 3.மஹாத்மா பள்ளி KK நகர் - வரிபாக்கி ரூபாய் 3,18,24,128 (044/03600)

4.SR டிரஸ்ட் உத்தங்குடி - வரிபாக்கி ரூபாய் 2,55,01,105 ( 028/02291)

5.CSI டிரஸ்ட் - வரிபாக்கி ரூபாய்  1,87,77,082 ( 069/01379 ) 

6.மாவட்ட விளையாட்டு அலுவலர் - வரிபாக்கி ரூபாய் 1,64,37,463 ( 047/01451 ) 

7. நாய்ஸ் பள்ளி நரிமேடு - வரிபாக்கி ரூபாய் 1,63,96,780 ( 042/02955)8 8.மகாத்மா CBSC 8.பள்ளி கொடிகுலம் - வரிபாக்கி ரூபாய்  1,49137,660 ( 027/04095 ) 

9.JC ரெஸிடென்சி - வரிபாக்கி ரூபாய்  1,34,80,137 (042/00347)
 10.ஜீவனா பள்ளி - வரிபாக்கி ரூபாய் 1,33,09,416 (019/03993)

 11.CSI டிரஸ்ட் வரிபாக்கி ரூபாய் 1,30,48,587 ( 069/01381 )
 12.விருதுநகர் TSM பள்ளி - வரிபாக்கி ரூபாய் 1,26,46,600 ( 022/06905)
 13.வெங்கடேஸ்வரன் - வரிபாக்கி ரூபாய் 1,21,41,568 ( 020/01931)
 14.ST. John பள்ளி - வரிபாக்கி ரூபாய் 1,20,73,968 ( 022/06905 )
 15.அருள்மலர் பள்ளி - வரிபாக்கி ரூபாய் 1,10,22,840 ( 044/03601 )

 16.St. Mary OF LEUCA வரிபாக்கி ரூபாய் - 98,68,848 ( 021/04266 )

 17.CSI டிரஸ்ட் - வரிபாக்கி ரூபாய்  96,37,043 ( 069/01380 ) 

18. காரியதரிசி ராமநாததபுரம் டிரஸ்ட் - வரிபாக்கி ரூபாய் 77,17,880 ( 042/02957 )

 19.அம்பிகா பள்ளி - வரிபாக்கி ரூபாய் 74,14,040 ( 033/03028 )

 20.மதுரை சிவகாமி நாடார் பெண்கள் பள்ளி - வரிபாக்கி ரூபாய் 69,71,520 ( 016/00291 ) 

21. MKR அய்யா நாடார் லேட்சுமி பள்ளி - வரிபாக்கி ரூபாய் 69,65,040 ( 053/01930 )  

22.Rotary Lahary பள்ளி - வரிபாக்கி ரூபாய் 68,25,700
( 041/029/26) 

23.EPF அலுவலகம் - வரிபாக்கி ரூபாய் 66,20,422 ( 042/01514 )

 24.அத்யாப்பானா பள்ளி - வரிபாக்கி ரூபாய் 63,47,952 ( 023/00751 )

 25.ஜெயா - வரிபாக்கி ரூபாய் 61,84,232 ( 020/01343)

26.FUSCOS பள்ளி - வரிபாக்கி ரூபாய் 57,55,060 ( 034/01110 

 27.உதவி ஆணையாளர் Armed Reserve போலீஸ் - வரிபாக்கி ரூபாய் 56,06,004 ( 047/01492 )

 

 28.EE PWD - வரிபாக்கி ரூபாய் 53,89,086 ( 042/01499 ) 
29. Dolphin பள்ளி -  வரிபாக்கி ரூபாய்  52,95,744 (019/03994) 
30. அருணாச்சலம் - வரிபாக்கி ரூபாய் 43,47,272 ( 020/01343 )
 31.மீனாட்சி பள்ளி - வரிபாக்கி ரூபாய் 48,96,904 ( 081/02938 )

 32. 7 th டே பள்ளி சொக்கிக்குளம் - வரிபாக்கி ரூபாய்  48,35,020 ( 042/02956)
 33. ஆனந்தா பள்ளி - வரிபாக்கி ரூபாய்  44,71,698 ( 010/01930 )

 34. YWCA பள்ளி - வரிபாக்கி ரூபாய்  44,64,040 ( 042/02958 )
 35.பத்மா - வரிபாக்கி ரூபாய்  44,03,908 ( 090/00964 )
36. குர்சித் - வரிபாக்கி ரூபாய்  38,43,449 ( 079/00273 ) 
37. குருசாமி - வரிபாக்கி ரூபாய்  34,88,564 ( 018/01514 ) 
38. EE, TWARD - வரிபாக்கி ரூபாய் 37,60.005 ( 027/01252 ) 
39.காவல் ஆணையாளர் - வரிபாக்கி ரூபாய்  17,13,506 ( 044/02520 )
 40. அரசு விருந்தினர் மாளிகை - வரிபாக்கி ரூபாய்  16,59,516 ( 047/01432 ) 
மாவட்ட நீதிபதி -  வரிபாக்கி ரூபாய்  7,69,315 ( 044/02520 ) 

இப்படி முதல் நூறு பேர்கள் மட்டும் 29/02/2020 அன்றைய தினத்தில் வைத்து இருக்கும் வரி பாக்கி மட்டும் 40,00,00,000 ( நாற்பது கோடி ) க்கு மேல் உள்ளது. மேலே சொன்ன அனைவரும் இந்த அளவு வரி கட்ட தகுதி உடையவர்கள், இவர்களிடம் வரி வாங்கி விட்டு சாமானிய மனிதனின் வீட்டு சாக்கடையை அடைக்க வாங்க மதுரை மாநகராட்சி அலுவலர்களே.என கேள்வி கேட்டுவருகிறார்கள் மதுரைவாசிகள்.!!

click me!