சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்? துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பின் அதிரடி சரவெடி விளக்கம்..!

Published : Feb 02, 2021, 02:31 PM IST
சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்?  துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பின் அதிரடி சரவெடி விளக்கம்..!

சுருக்கம்

சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கமளித்துள்ளார்.

சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஏன் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் விளக்கமளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.  அதில்,  சசிகலா பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடவே, இது அரசியல்சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்று தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா ஆதரவாக போஸ்டர் ஓட்டிய எங்களை கட்சியில் இருந்து நீக்கியது போல ஓபிஎஸ் மகனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என கேள்விகளும் எழுந்தது. 

இந்த சூழலில் சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்? என ஜெயபிரதீப் விளக்கத்தை கொடுத்துள்ளார். சசிகலாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!