சசிகலாவை வரவேற்க செல்கிறார் ஓ.பி.எஸ்..? அதிரிபுதிரியாகும் அதிமுக..!

Published : Feb 02, 2021, 02:06 PM IST
சசிகலாவை வரவேற்க செல்கிறார் ஓ.பி.எஸ்..? அதிரிபுதிரியாகும் அதிமுக..!

சுருக்கம்

விடுதலையான சசிகலா பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் தமிழகம் வருகிறார்.  

விடுதலையான சசிகலா பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் தமிழகம் வருகிறார்.

இதை முன்னிட்டு அமமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பெங்களூர் -ஓசூர்-ஆம்பூர்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரும் சசிகலாவுக்கு சென்னை எல்லையில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமமுக சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சசிகலாவை வரவேற்க அமமுகவினர் மட்டுமல்லாது அதிமுகவினரும் திரண்டு வருவார்கள். துணை முதல்வரும் சென்னைக்கு எல்லைக்கு வந்து சசிகலாவை வரவேற்பார் என்று தனது நிர்வாகிகளிடம் உறுதியாக கூறி வருகிறார் டி.டி.வி.தினகரன்.
 
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக்கொண்டே, தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கே தெரியாமல், டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்து பேசியதை அவரே போட்டு உடைத்தார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க 100 சதவிகிதம் வாயிப்பில்லை என்று முதல்வர் சொல்லி வரும் நிலையில், ஓ.பி.எஸ் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவரது மகன் ஜெயபிரதீப், ’’பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். இது சர்ச்சை ஆனதும், மனிதாபிமான அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன் என விளக்கம் அளித்தார். இந்நிலையில், அதேநேரத்தில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், சசிகலா நலம்பெற வேண்டும் என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.

 

இத்தனைக்கும் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயபிரதீப் நேற்று மீண்டும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘’மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்’’ என்ற செய்யுளை விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அந்த விளக்கம்தான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. உயரிய குறிக்கோளை உடையவர்கள் எடுத்துக் கொண்ட காரியம் முடியும்வரை அவமதிப்பு போன்றவற்றை எல்லாம் பொருட்டாகவே கருதமாட்டார்கள் என்கிறார் ஶ்ரீகுமரகுருபர சுவாமிகள் என்பதுதான் அதற்கான விளக்கம்.  ஏற்கனவே சசிகலாவை ஓபிஎஸ் ஆதரிக்க வாய்ப்புள்ளதாக அரசல் புரசலாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் போட்டிருக்கும் பதிவு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லத்தான் வருகிறது. அதாவது சசிகலாவுடன் சமாதானமாக போவதைத்தான் ஓபிஎஸ் தரப்பு பூடகமாக நூல்விட்டுப் பார்க்கிறதோ என்கிற விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.

ஆட்சியில் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்று தொடர்ந்து ஓபிஎஸ் வருவதாலும், சசிகலாவுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால்தான் தினகரன் சொன்னது உண்மையாகவே நடக்கும் என்றே பேச்சு எழுந்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ED, சிபிஐ, அமித்ஷா மிரட்டலால் உருவான NDA கூட்டணி.. விளாசித் தள்ளிய ஸ்டாலின்.. பிரதமர் மீதும் விமர்சனம்!
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவான கேடு கெட்ட கட்சி பாஜக.. வெட்கமே இல்லையா? பிரதமர் மோடியை விளாசிய உதயநிதி!