டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிட்டது ஏன்..? கருப்பில் இருந்து வெள்ளைக்கு மாறிய மு.க.ஸ்டலின் பதில்..!

By Thiraviaraj RMFirst Published Jun 12, 2021, 2:19 PM IST
Highlights

கடந்த ஆண்டு கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கொடி, கருப்பு மாஸ்க் சகிதம் மதுக்கடைகளுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் பலரும், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கள வீரர்களான அவர்களுக்கு கூட, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத, தமிழக அரசை கண்டிக்கிறோம்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு நடவடிக்கை பற்றி கவலைப்படாமல், மது கடைகளை திறப்பதில் மட்டும், ஆர்வத்துடன் செயல்படும், தமிழக அரசை கண்டிக்கிறோம் என கடந்த ஆண்டு கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கொடி, கருப்பு மாஸ்க் சகிதம் மதுக்கடைகளுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

ஆனால் இப்போது அவரது தலைமையின் கீழ் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அவர் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இதற்கு தமிழக பாஜக மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த முதல் அலையின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, டாஸ்மாக் கடை திறப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள நிலையில் எதற்காக டாஸ்மாக் கடையை திறக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பேசிய முதல்வரிடம் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘’கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிடப்பட்டது. தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது’’ என பதிலளித்தார். 

click me!