டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றும் ஜெ.சமாதிக்கு ஏன் போகலை ?

First Published Dec 30, 2017, 6:22 PM IST
Highlights
Why did not dinakaran will go to jay Samadhi after his succeed in RKNagar


ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றால் பதவி பறிபோகும்  என ஜோதிடர்கள் எச்சரித்ததால் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றும் ஜெயலலிதா நினவிடம் பக்கமே செல்லாமல் டி.டி.விதினகரன் தவிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எம்ஜியார் நினைவிட வாளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் மர்மானது என  பொது மக்கள் பேசி வருவதால், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மறைந்த ஜெயலலிதாவின் ஆவி, சசிகலா குடும்பத்தை பழி வாங்குவதாக புரளி கிளம்பி வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் , உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருடைய ஆவி போன்ற உருவம் ஒன்று அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அழுக்குரல் கேட்பதாக மற்றொரு வதந்தியும் பரவலாக பரவியது.



மறைந்த ஜெயலலிதாவுக்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆவி, நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றது, சசிகலா குடும்பத்தில் சில மரணங்கள், சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து நடத்தப்பட்ட ஐடி ரெய்டு என அனைத்துக்கும் காரணம் ஜெயலலிதாவின் ஆவிதான் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக புரளி ஒன்று தற்போது கிளம்பி இருக்கிறது. அது ஜெ நினைவிடம் சென்றால் பதவி பறி போகும் என்று. யார் இதை நம்புகிறார்களோ தெரியவில்லை. டி.டி.வி.தினகரன் கட்டாயமாக நம்புகிறார்.  இது குறித்து அவரது ஜோதிடர் எச்சரிக்கை விடுத்ததாலேயே தினகரன் ஜெ சமாதி பக்கமே வரவில்லை என கூறப்படுகிறது.

ஆர்,கே..நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ சான்றிதழை கடந்த 24-ம் தேதி பெற்றுக் கொள்ள  வந்தபோதும்,  கடந்த 29-ம் தேதி  டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ-வாக பதவியேற்றபோதும் ஜெ. நினைவிடத்திற்கு செல்லவில்லையாம்.

எம்எம்ஏ வாக பதவியேற்ற அன்று  டி.டி.வி.தினகரன்  ஜெ. நினைவிடம் வருவார் என மீடியாக்கள் எல்லாம் லைவாக ஒளிபரப்ப  அங்கு குவிந்திருந்தும்,  அந்த பக்கம் அவர் திரும்பிகூட பார்க்கவில்லையாம்.

 

 

click me!