அஜித்தை அ.தி.மு.க. ஆதரிப்பது ஏன்?! ரஜினி, கமலை ஓவர் டேக் செய்த காமெடி விவேக்!

By Vishnu PriyaFirst Published Sep 15, 2019, 3:37 PM IST
Highlights

சுபஸ்ரீ இறந்த சம்பவம், மிகவும் வருத்தம் அளிக்கிறது. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்: விவேக் (சூப்பருண்ணே. நீங்க ஓப்பனா சொல்லிட்டீங்க. ஆனா சினிமாவிலிருந்து கட்சி ஆரம்பிச்சுட்ட, ஆரம்பிக்கிறதா பல வருஷம் சொல்லிட்டு இருக்கிற முக்கியஸ்தர்கள் ரெண்டு பேரு வாயே திறக்காம இருக்கிறாங்களே

*எங்கள் கட்சியில் இணைந்ததற்கு நன்றி. மக்கள் எதிர்பார்க்கும் ஊழல் இல்லாத  அரசை விரைவில் நாங்கள் அமைப்போம்: கமல்ஹாசன். 
(அப்புறம் தல என்ன திடீர்ன்னு அரசியல் பக்கம் வந்துட்டீங்க? பிக்பாஸ் பொழப்பு, இந்தியன் 2 ஷூட்டிங் இதெல்லாம் போர் அடிச்சிடுச்சா? ஊழல் இல்லாத அரசு அமைக்க ஒண்ணும் அவசரமே இல்லை. மெதுவா, நிதானமா பிக்பாஸ் சீசன்  இருபது, முப்பது முடிஞ்சதும் அமைக்கலாம்)

*தமிழகத்தில் நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம். நடிகர் விஜய் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நல்ல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களை ஆதரிப்போம்:ராஜேந்திர பாலாஜி. (ஏம்ணே கமல், விக்ரமெல்லாம் நல்ல நடிகர்களில்லையா? ரஜினி, அஜித்தை நீங்க ஏன் ஆதரிப்பீங்கன்னு உலகத்துக்கே தெரியும். சீனியரு தாமரையோட ஆளு, ஜூனியர் உங்களோட மாஜி தலைவியை ‘அம்மா’ன்னு கூப்பிட்ட ஆளு. அதனாலேதானே இந்த பாசம்?) 

*ஜாதி வேற்றுமை இந்த மண்ணில் இன்னும் நிலவுகிறது, பெண்ணடிமைத்தனம் இன்னும் உள்ளது. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அமல்ப்படுத்துகின்றனர். இந்த பிரச்னைகள், சிக்கலையெல்லாம் தீர்க்கத்தான் திராவிடர் கழகம் இன்னும் தேவை: கலி பூங்குன்றன். 
(அப்புறம் இத்தனை வருஷமா கருப்புச் சட்டையை போட்டுக்கிட்டு குறுக்கா மறுக்கா ஓடி ஓடி என்னதான் பாஸ் செஞ்சீங்க? இன்னும் பெரியார் தேவை, இன்னும் திராவிடர் கழகம் தேவை, இன்னும் பெரியாரிஸம் தேவைன்னு சொல்லி சொல்லியே பக்காவா காலத்தை ஓட்டுறீங்கன்னு நல்லாவே தெரியுது.) 

*அனைத்து இடங்களிலும் பேனர் வைக்கும் பழக்கத்தை நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். சுபஸ்ரீ இறந்த சம்பவம், மிகவும் வருத்தம் அளிக்கிறது. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்: விவேக்
(சூப்பருண்ணே. நீங்க ஓப்பனா சொல்லிட்டீங்க. ஆனா சினிமாவிலிருந்து கட்சி ஆரம்பிச்சுட்ட, ஆரம்பிக்கிறதா பல வருஷம் சொல்லிட்டு இருக்கிற முக்கியஸ்தர்கள் ரெண்டு பேரு வாயே திறக்காம இருக்கிறாங்களே. அதிலும் கட்சியை ஆரம்பிச்சிட்டவரோட டீம் கட்டுற பேனர்களோட செலவை திரட்டினால் ஆழ்வார் பேட்டை பக்கம் ஒரு அய்யனார் பேட்டையையே உருவாக்கிடலாம்.) 

*காவிரியில் பல அணைகள் கட்டப்பட்டதால் ஆற்றில் வண்டல் மண் வரவே இல்லை. வண்டல் வந்தால் மட்டுமே அது டெல்டா பகுதி எனப்படும். டெல்டா பகுதியில் நிலத்தடி நீரை அதிகரிக்கத்தான் கோடிக்கணக்கில் மரங்களை நட முடிவு செய்துள்ளோம்:    ஜக்கிவாசுதேவ். 
(அதெல்லாம் சரிதான் சாமி. இன்னைக்கு நட்டுற நீங்க, நாளப்பின்ன இதே இடத்துல ஆசிரமம் கட்டுறேன்னு சொல்லிட்டு உரிமையா வெட்டி வீழ்த்திடுவீங்களோ?ன்னு டவுட்டா கேட்டு சில அமைப்புகள் கோஷம் போடுறது உங்களுக்கு கேட்குதா?)

-    


 

click me!