முதல்வர் காட்டுபவர் தான் வருங்கால பிரதமர்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி!!

By Narendran S  |  First Published Oct 30, 2022, 6:24 PM IST

முதல்வர் யாரை கை காட்டுகிறரோ அவர் தான் வருங்கால பிரதமராவார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


முதல்வர் யாரை கை காட்டுகிறரோ அவர் தான் வருங்கால பிரதமராவார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கலைஞர் திடலில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 700 பேருக்கு தையல் மிஷன், 400 நபருக்கு சலவை பெட்டி, 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், 61 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: குஜராத்தில் மும்முனைப்போட்டி.! முந்தும் ஆம் ஆத்மி, பதறும் காங்கிரஸ் - ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 2000 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கழக முன்னோடிகள் 300 பேருக்கு பொற்கிழியையும் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவில்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் ஆட்சி சூப்பர்..பாஜகவுக்கு தான் ஓட்டு.! ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பில் தகவல்!

பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தமிழக முதல்வர் யாரை கைக்காட்டுகிறரோ அவர் தான் வருங்கால பிரதமராக அமர்வார் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

click me!