தமிழகத்தில் யார் யாருக்கு எந்த விருது? ட்வீட் போட்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Published : Jan 26, 2023, 07:35 AM ISTUpdated : Jan 26, 2023, 07:42 AM IST
தமிழகத்தில் யார் யாருக்கு எந்த விருது? ட்வீட் போட்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சுருக்கம்

கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள், இரண்டு பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஏழு பேருக்கு மறைவுக்கு பின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், தமிழகத்தைச் சேர்ந்த கலைப் பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளை, சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவத் துறையில் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி, இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஜோடியாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். அதேபோல், கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்மபூஷண் விருது, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பத்மபூஷண் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே. கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாலம் கல்யாணசுந்தரம் (சமூக சேவை), டாக்டர். கோபால்சாமி வேலுசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!