யார் இந்த SG சூர்யா? இளம் வயதில் பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பு கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்..!

Published : May 07, 2022, 01:14 PM IST
யார் இந்த SG சூர்யா?  இளம் வயதில் பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பு கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 44 பேர் அடங்கிய பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதில், இளம் வயதிலேயே SG சூர்யாவுக்கு  பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பு கிடைத்திருப்பது பேசும் பொருளாக உருவாகியுள்ளது. 

யார் இந்த SG சூர்யா?

தமிகத்தின் மான்செஸ்டர் கோவையில் பிறந்தவர். வாசவி வித்தியாலயாவில் பள்ளிப் படிப்பு, புகழ்பெற்ற PSG'யில் இளங்கலை பட்டம் பெற்ற இவரை புனேவின் சட்டக்கல்லூரி வழக்கறிஞர் படிப்பை முடித்தார். இவரின் தாத்தா மறைந்த பா.ஜ.க மூத்த தலைவர் திருக்கோவிலூர் சுந்தரம். ராஷ்டிரிய ஸ்வயம் சேவகர் சங்கத்தில் சிறு வயதில் இணைத்த இவருக்கு தேசிய சிந்தனையும், தெய்வ பத்தியும் வாழ்வின் முழு முதல் சிந்தனைகளாக இளமையிலேயே ஏற்பட்டது. பின்னாளில் அந்த சிந்தனை விதைகள் தான் ஒரு தேசிய கட்சியில் இவரை பதவி பார்க்காமல், கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பார்க்காமல் ஓட வைத்தது.

2012'ம் ஆண்டு குஜராத் மாநில தேர்தல் களத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அன்றைக்கு மீண்டும் குஜராத் முதல்வராக  ஆட்சியில் அமர தகவல் தொழில் நுட்ப யுக்தி குழுவில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து 2014'இல் இந்திய தேசத்தில் தலையெழுத்தை மாற்றிய தேர்தலான நாடாளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராக உழைத்த சிறப்பு தகவல் தொழில்நுட்ப குழுவிலும் இவரின் பங்கு உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் அரசியல் களம் தகவல் தொழில்நுட்ப குழு என ஒன்று உள்ளது என அறிந்திராத காலத்திலலேயே பா.ஜ.க'வின் மாநில தகவல் தொழில்நுட்ப குழுவின் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் உள்ள தகவல் தொழில்நுட்ப குழுதான் 2016'ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க'வில் பணியாற்றியது. இதுவரை இவர் பா.ஜ.க'விற்காக 10 சட்டமன்ற தேர்தல்களில் தனது பிரச்சார யுக்திகள் மூலம் பங்களித்துள்ளார். இத்தனை குறைந்த வயதில் இவ்வளவு தேசிய சிந்தனை கொண்ட இவரின் பணிதான் இவரை இன்று தமிழக பா.ஜ.க'வின் மாநில செயலாளராக பொறுப்பை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!