நான் ஜெயலலிதாவின் ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !

By Raghupati R  |  First Published May 7, 2022, 1:07 PM IST

சசிகலா கடந்த சில நாட்களாக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு வந்தார். 


இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தீபாராதனை தரிசனம் செய்ய வந்த அவர் கையில் 5 அடி உயர வெண்கல வேலுடன் கோவிலுக்குள் சென்று மூலவர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னர் சசிகலா அங்குள்ள ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஒரு வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தினேன். 

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் தனியே செல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களில் திமுகவினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. இந்த ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

ஒருவருடம் கடந்தும் இன்னும் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதியோர் உதவித்தொகை கொடுக்காமல் இருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் திமுக ஆட்சி ஒரு வெறுப்பை தான் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதல்வரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இனி அரசு இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சியை கொடுப்பேன். அதிமுகவை கைப்பற்றுவதற்கு ஒன்றுமில்லை, அதிமுக எங்கள் கட்சி, தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். விரைவில் அரசியல் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன்' என்று கூறினார்.

இதையும் படிங்க : M.K Stalin : 'வாரிசு தானே' என்று கூறியவர்கள் அடங்கிவிட்டார்கள்.! இனியெல்லாம் இவர்தான்.! முரசொலி பாராட்டு !

இதையும் படிங்க : அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.! அகவிலைப்படி உயர்வு - முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்பு ?

click me!